உக்ரைனில் போர் ஒரு முக்கியமான புதிய கட்டத்தில் நுழையும் போது, நாட்டின் முதல் பெண்மணி ஒலெனா ஜெலென்ஸ்கா ஒரு முக்கிய வீரராக மாறியுள்ளார். இவர் முன்னணி இராஜதந்திரி மற்றும் அவரது நாட்டின் உணர்ச்சிகரமான எண்ணிக்கையின் முகம் என்று வோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவின் பிரபல மாத இதழான வோக் இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த புகைப்படங்களுக்கு வரவேற்பு ஒருபக்கம் இருந்தாலும், போர் நடக்கும் நேரத்தில் இப்படி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவசியமா என்ற எதிர் கேள்விகளும் எழுந்துள்ளன. தங்கள் நாடு போரால் அழிக்கப்பட்ட நேரத்தில் ஒரு பத்திரிகைக்கு போஸ் கொடுத்ததற்காக இந்த ஜோடிக்கு எதிராக விமர்சனம் வருகிறது.