உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் நிதியுதவி, ஆயுதங்கள் வழங்கினாலும் உக்ரைனுக்கு ஆதரவாக நேராக போரில் ஈடுபடவில்லை. பல பகுதிகளில் உக்ரைன் மக்களே ஆயுதம் தாக்கி ரஷ்யா ராணுவத்தை எதிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் உதவ வராத நேச நாடுகள் மீது கடும் விமர்சனம் வைத்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி “இன்று முதல், உயிரை இழக்கப்போகும் அனைத்து உக்ரேனிய மக்களுக்கான காரணம், நீங்கள் மட்டுமே. உங்கள் பலவீனத்தாலும் உங்கள் ஒற்றுமை இன்மையாலும் தான், மக்கள் உயிரிழக்க போகிறார்கள். வெறும் 50 டன் டீசலை உங்களால் உக்ரைனுக்கு வழங்க முடிந்துள்ளது. அதை வைத்து நாம் "Budapest குறிப்பாணையை" வேண்டுமானால் எரிக்கலாம்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.