இங்கிலாந்து நாட்டில் புலம்பெயர்ந்தவர்களின் மாபெரும் போராட்டம்.. பிரதமர் எச்சரிக்கை..!

Siva

திங்கள், 15 செப்டம்பர் 2025 (13:43 IST)
இங்கிலாந்தில் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்கள் லண்டனில் நடைபெற்ற பேரணி, வன்முறையாக மாறியுள்ளது. வலதுசாரி ஆர்வலர் ஒருவர் தலைமையில் நடத்தப்பட்ட இந்த பேரணியில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு வன்முறையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், வன்முறையைத் தடுக்க முயன்ற 26 காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.
 
இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கடும் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு உரிமை உண்டு. ஆனால், அதே நேரத்தில், சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை, மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டில் இன ரீதியான மிரட்டலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று கூறியுள்ளார்.
 
மேலும், "மிரட்டுவதன் மூலமாகவோ அல்லது பணியில் உள்ள அதிகாரிகளை தாக்குவதன் மூலமாகவோ போராட்டக்காரர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக் கூடாது. மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்