இந்திய விமானங்களுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

வியாழன், 22 ஏப்ரல் 2021 (20:05 IST)
ஏற்கனவே இந்திய விமானங்களை பிரிட்டன் உள்பட ஒரு சில நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் நாடும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது 
 
இந்தியாவில் இருந்து துபாய் வரும் விமானங்களுக்கு தடை விதித்து ஐக்கிய அமீரகம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு உலக நாடுகள் பலவும் விதித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா-துபாய் இடையே விமான சேவை 10 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் நாடும் சேர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்