18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி; முன்பதிவு அவசியம்! – தேசிய சுகாதாரத்துறை அறிவிப்பு!

வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:55 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களில் வேகமாக அதிகரிக்க தொடங்கிய நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியா முழுவதும் மாநில வாரியாக ஊரடங்கு, தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையிலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் அரசின் Cowin.Gov.in தளத்தில் ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் இந்த பதிவு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்