சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு ‘ஹார்ட் எமோஜி’ அனுப்பினால் சிறை: புதிய சட்டம் அமல்..!

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (15:19 IST)
அறிமுகம் இல்லாத பெண்களுக்கு சமூக வலைதளங்களில் ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறை என சவுதி அரேபியாவில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 
 
ஃபேஸ்புக், ட்விட்டர், மெசஞ்சர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத பெண்களுக்கு ஹார்ட் இமோஜி அனுப்பக்கூடாது என்றும் மீறி அனுப்பினால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றி உள்ளதாக சவூதி அரேபியா மற்றும் குவைத் அரசுகள் தெரிவித்துள்ளன
 
அறிமுகம் இல்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பியது நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது  2000 தினார் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  2000 தினார் என்பது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடப்பட்டது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்