நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக 22 பேர் மீதான வழக்கில் இருந்து சுப. உதயகுமார், புஷ்பராயம், சேசுராஜன் ஆகியோரை வள்ளியூர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டது.
கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக் காரரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 349 வழக்குகளில் இருந்து 259 வழக்குகள் அரசால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இப்போராட்டம் தொடர்பான வழக்கில் 18 பேருக்கு7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து வள்ளியூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.