41 பில்லியன் டாலர் டீலிங்... ட்விட்டரை வாங்குகிறாரா எலான் மஸ்க்?

திங்கள், 25 ஏப்ரல் 2022 (12:34 IST)
ட்விட்டர் நிறுவனத்தின் 100% பங்குகளை வாங்குவதற்கு முன் வந்துள்ள எலான் மஸ்க்  ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்க தயார் என்று அறிவித்துள்ளார். 

 
எலான் மஸ்க்-கிற்கு ட்விட்டரில் 9 சதவீத பங்குகள்: 
டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவற்றின் நிறுவனர் எலான் மஸ்க். உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் சமீபத்தில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கினார்.
 
இதை தொடர்ந்து ட்விட்டர் நிர்வாக குழுவில் அவரை இடம் பெற அழைத்ததற்கு அவர் அதை மறுத்துவிட்டது பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது எலான் மஸ்க் ட்விட்டரையே மொத்தமாக வாங்க பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியது. முன்னதாக அவர் ட்விட்டரில் வாங்கிய 9 சதவீத பங்குகளே 3 பில்லியன் டாலர் பெருமானம் கொண்டது. 
எலான் மஸ்க்-கிற்கு விற்கப்படுகிறதா டிவிட்டர்? 
ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்துள்ள எலான் மஸ்க்   மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக 41 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன் வந்துள்ளார். 
 
இது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகக் குழுவினர் மற்றும் எலான் மஸ்க் தரப்பினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வாரத்திற்குள் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிற்கு விற்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
சொந்த வீடு இல்லாத எலான் மஸ்க்: 
41 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன் வந்துள்ள எலான் மஸ்கை சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கை இவரை உலகின் நம்பர் 1 பணக்காரர் என அறிவித்தது. அது சம்மந்தமாக அவர் அறிவித்த நேர்காணலில், எனக்கென்று சொந்தமாக இடம் கூட கிடையாது. நான் எனது நண்பர்களின் வீடுகளில் இருக்கும் எக்ஸ்டரா பெட் ரூம்களில் தங்கிக் கொண்டு இருக்கிறேன் என கூறி அதிர்ச்சியைக் கிளப்பினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்