அமெரிக்காவில் அணு கழிவுகள் சுரங்கம் சிதைவு; கதிர் வீச்சு அச்சம்

புதன், 10 மே 2017 (20:04 IST)
அமெரிக்கா வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள அணு உலையில், அணு கழிவுகளை சேமித்து வைக்கும் பகுதியின் சுவர் இடிந்த விழுந்ததால் கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது.


 

 
அமெரிக்கா வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டெல் நகரில் ஹான்போர்ட் என்னும் அணு தொழிற்சாலை உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா, அணுகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்திய புளூட்டோனியம் தாயரிக்கும் தொழிற்சாலையாக இருந்தது. பின்னர் 1987ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை மூடப்பட்டது.
 
அணுக்களில் இருந்து வெளியான கழிவுகள் அனைத்தும் பூமிக்கு அடியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அணு கழிவுகளை கொண்டு செல்ல சுரங்க பாதை அமைப்பட்டது. இந்த சுரங்கப்பாதை வழியாகதான் அணுகழிவுகளை இரும்பு தொட்டி மூலம் பூமிக்கு அடியில் கொண்டு செல்லப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அந்த சுரங்கத்தின் மேற்பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. சுமார் 20 அடி நீளத்துக்கு இந்த சுரங்கம் இடிந்து விழுந்தது. இதனால் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் உடனே வெளியேற்றப்பட்டனர். 
 
இந்த சம்பவம் அமெரிக்காவில் அணு கதிர் வீச்சு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. என்றாவது ஒருநாள் இந்த கழிவுகள் கட்டாயம் அபாயமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்