குடியரசு கட்சியிலிருந்து விலகும் ட்ரம்ப்; தேச பக்தி கட்சி தொடங்க திட்டம்!

புதன், 20 ஜனவரி 2021 (10:25 IST)
அமெரிக்க அதிபராக இன்று ஜோ பிடன் பதவியேற்கும் நிலையில் பதவி விலகியுள்ள முன்னாள் அதிபர் ட்ரம்ப் தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றியை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்த அதிபர் ட்ரம்ப் நாடாளுமன்ற தாக்குதலுக்கு பிறகு பதவி விலக ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் அவரது குடியரசு கட்சியினருக்கே ஏற்புடையதாக இல்லை என பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் ட்ரம்ப் விரைவில் குடியரசு கட்சியை விட்டு விலக உள்ளதாகவும், தேச பக்தி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்