அமெரிக்க ராணுவ அமைச்சராகும் ‘பைத்தியக்கார நாய்’

சனி, 3 டிசம்பர் 2016 (16:15 IST)
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் மேட்டிஸ் என்பவரை டொனால்ட் ட்ரம்ப் பைத்தியக்கார நாய் என்று கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது.


 

ஓய்வு பெற்ற கடற்படை ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் என்பவரை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இவர் மிகவும் பயங்கரமான வார்த்தைகளை, சர்ச்சைக்குரிய விஷயங்களை கவலையின்றி பேசுபவர் என்பதோடு இராக், ஆப்கானிஸ்தானில் போர்ச்சூழலை எதிர்கொண்டவர் என்று கருதப்படுபவர்.

தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தில் ஒஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் கூட்டம் ஒன்றில் டொனால்ட் டிரம்ப் அறிவிக்கும் போது, ‘‘ஜெனரல் மேட்டிஸ் என்ற பைத்தியக்கார நாய் நமது பாதுகாப்பு அமைச்சர்’’ என்று கூறியவுடன் கூட்டத்தில் பெரும் ஆரவாரம் எழுந்தது.

‘ஆனால் நாம் இவரை திங்களன்றுதான் அறிவிக்கவிருக்கிறோம் எனவே யாரிடமும் சொல்லாதீர்கள்’ என்று டிரம்ப் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்