பாகிஸ்தான் வங்கிகளை இழுத்து மூட டிரம்ப் அதிரடி உத்தரவு!!
சனி, 9 செப்டம்பர் 2017 (12:10 IST)
அமெரிக்காவில் இயங்கி வரும் வெளிநாட்டு வங்கிகளின் நிதி சேவை ஒழுங்காக இருக்கிறதா என்று அமெரிக்கா அரசு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் நியூயார்க் நகரில் செயல்பட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஹபீப் வங்கி கிளை மீது டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கைளை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் வங்கி அமெரிக்காவுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தைத்தை மீறும் விதமாக பணமோசடி, பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால் வங்கியை மூட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அந்த வங்கிக்கு 225 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.1,460 கோடி) அபராதமும் விதித்துள்ளது.