பயங்கரவாதத்துக்கு துணைபோனதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

வியாழன், 7 செப்டம்பர் 2017 (18:19 IST)
பயங்கரவாதத்துக்கு துணைபோனது உண்மைதான் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.


 

 
பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு துணைபோனது உண்மைதான் என ஒப்புக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நாடு என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. அண்மையில் அமெரிக்கா கூட இதை தெரிவித்தது.  இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியதாவது:-
 
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற அமைப்புகள் பாகிஸ்தான் மண்ணில் செயல்பட்டது உண்மைதான். ஆனால், அந்த அமைப்புகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதன் வாயிலாக பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக உள்ளது என்பதை சர்வதேச சமூகத்துக்கு காட்டுவோம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்