பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாய் நுழைந்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் சக்தி. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் ஆர்த்தி, ஜூலி மற்றும் சக்தி ஆகியோர் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது வந்த புதிய புரொமோவில் சக்தி நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சிநேகனிடம் தன் மனதில் இருந்த அனைத்து கேள்விகளையும் கேட்கிறார். இந்நிலையில் தான் திரும்பி வந்ததில் உண்மையாகவே சந்தோஷமா என்று சக்தி சினேகனிடம் கேட்கிறார். இதுவரை வெளியே சென்றவர்கள் அனைவரும் உங்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தார்கள். அது உங்களின் தந்திரம் என நினைக்கிறேன் என்று சக்தி சினேகனிடம் கூற அவர் அதிர்ச்சி அடைகிறார்.
4 வாரம் உங்களுடன் பழகியுள்ளேன், ஆனால் உங்க தந்திரத்தை நான் பார்த்ததில்லை என்றும், அதுதான் உங்க கேம்னு நான் நினைக்கிறேன் என்று சக்தி, சிநேகனிடம் பல கேள்விகளை கேட்கிறார். இதுவே சிநேகனும், சக்திக்குமிடையே வாக்குவாதமாக மாறுகிறது.