முகக்கவசம் கட்டாயம்: 102 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விழிப்புணர்வு பிரசுரம்!

ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (11:36 IST)
102 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விழிப்புணர்வு பிரசுரம்!
கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கிலும் உள்ள பொதுமக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மாஸ்க் அணிவது கட்டாயம் என்று பொதுமக்களுக்கு உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார அமைச்சகம் வரை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 102 ஆண்டுகளுக்கு முன்பே முகல்கவசம் அணிவது கட்டாயம் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த பிரசுரம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 1918ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பரவியது. இந்த காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் சுமார் 5 கோடி பேர் பலியானதாகவும் இந்த சமயத்தில் அனைவரும் மாஸ்க் அணிந்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் விழிப்புணர்வு பிரசார பிரசுரத்தை வெளியிட்டதாகவும் தெரிகிறது 
 
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை 102 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அதே செஞ்சிலுவை சங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஸ்பானிஷ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முகக்கவசம் உதவியது போலவே கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கவும் முகக்கவசம் உதவும் என்று அந்த டுவிட்டில் கூறப்பட்டுள்ளது 
102 ஆண்டுகளுக்கு முன்பே முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை கூறிய பிரசுரத்தின் புகைப்படம் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்