டோங்கா தீவுக்கு அருகே கடல் பகுதியில் ஹங்கா ஹபாய் எரிமலை கடந்த 15ம் தேதி வெடித்து சிதறியதால் சுனாமி ஏற்பட்டது. 40 கி.மீ தூரத்திற்கு எரிமலை கற்கள் தூக்கி வீசப்பட்டதாலும், சுனாமியாலும் பல தீவுகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இதனால் சுற்றியிருந்த தீவு நாடுகள் சாம்பலால் மூடப்பட்ட நிலையில், குடிநீரும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியது.
இந்த எரிமலை வெடிப்பு சம்பவம் குறித்து நாசா புவி கண்காணிப்பகம் கூறுகையில் ”எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட ஆற்றலானது 1945ம் ஆண்டு ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டை காட்டிலும் 100 மடங்கு ஆற்றல் வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளனர். இந்த எரிமலை வெடிப்பை தொடர்ந்து படர்ந்துள்ள சாம்பலால் கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளை உருவாக்குவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.