பிரான்ஸ் தலைநகர் பாரீசில் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் சர்க்கஸ் நடைபெறவுள்ளது. இதற்காக சிங்கம், புலி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட விளங்குகள் வரவைகப்பட்டன.
இந்நிலையில், சர்க்கஸில் இருந்து 200 கிலோ எடை கொண்ட புலி ஒன்று தப்பித்து பாரீஸ் நகர் சாலைகளில் சுற்றிதிரிந்தது. இதனால் பொது மக்கள் பீதியும், அச்சமும் அடைந்தனர்.
பின்னர், பாதுகாப்பு கருதி டிராம் வண்டிகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மறுபக்க தீயனைப்பு படையினர் மற்றும் சர்க்கஸ் ஊழியர்கள் புலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.