இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இறுதிக்கட்ட போர் நடைபெற்றது. இதில் 40000க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதனை ஐ.நா, புள்ளி விபரங்கள் உறுதிபடுத்துகின்றனர். இதையடுத்து போர் குற்றம் தொடர்பாக நீதி விசாரணை கோரி கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் போரின் போது இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து முதன்முறையாக அதிபர் சிறிசேனா பேசியுள்ளார். அவர் பேசியபோது, 2009ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது தமிழர்களை கொன்றுகுவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மனசாட்சியுடன் ஏற்றுகொள்ள வேண்டும் என்று கூறினார்.