பிரபஞ்சத்தின் வெப்பநிலை அதிகரித்துள்ளது...ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

வெள்ளி, 13 நவம்பர் 2020 (20:43 IST)
உலகில் பெருமளவு ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பான் மற்றும் வாகனங்கள் எரிபொருள்,  தொழிற்சாலை புகை ஆகியவற்றால் நாளுக்கு நாள் பூமியின் வெப்பம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு மக்களின் பயன்பாடு காரணம் என்றாலும் விண்மீன்களின் செயல்பாடால் பிரபஞ்சத்தின்  வெப்பநிலை அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமேசான் உள்ளிட்ட பெருவனங்களிலும்  காட்டுத் தீ தோன்றி பல கோடி  ஆண்டுகளாக இருந்த வனத்தை சமீபத்தில் அழித்தது. இந்நிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் காடுகளைப் பாதுகாக்க வேண்டுமெனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் CCAPP என்ற ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட சமீபத்திய ஆராய்ச்சியில் கடந்த 10 பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சத்தில் உள்ள வாயுக்களின் வெப்பநிலை அளவு 10 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இப்போதுள்ள வெப்பநிலை சுமார் 2 மில்லியன் டிகிரில் கெவினை எட்டியுள்ளதாகவும், இது மேலும்  4 டிகிரி பாரன்ஹீட்ட் ஆகும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேசமயம்  விண்மீன் மற்றும் பால்வளி அண்டத்தில் உள்ள கோள்களின் செயல்பாடுகளாக் தான் இந்த வெப்பம் ஏற்படுவதாகவும், இது பூமியில் நிலவும் வெப்பநிலையுடன் தொடப்பில்லை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்