இதைதான் சாப்பிடணும்.. இவ்ளோதான் சாப்பிடணும்..! – உணவுக்கு கட்டுப்பாடு போட்ட வட கொரியா!

வியாழன், 12 நவம்பர் 2020 (12:29 IST)
வடகொரியாவில் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதால் வடகொரிய அதிபர் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

வட கொரிய சர்வதேச விதிகளை மீறி அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதாக முன்னதாக அமெரிக்கா வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில் சமீபத்தில் தொடர்ந்து மூன்று முறை வடகொரியாவை புயல் தாக்கியதால் வடகொரியாவில் உணவு உற்பத்தி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

பொருளாதார தடை, கொரோனா, புயல் போன்ற பல்வேறு காரணங்களால் வட கொரியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில் உணவு பொருட்கள் வீணாவதை தடுக்க அதிபர் கிம் ஜாங் உன் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி கொரியாவில் நிகழ்ச்சிகளில் என்ன உணவு வகைகள் பரிமாறலாம், எந்தெந்த நிகழ்வுகளில் எந்த உணவை சாப்பிடலாம் என்பது குறித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், உணவை வீணடித்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்