இந்தியாவை பகைத்த பிரதமர்.. ராஜினாமா செய்ய கெடு விதித்த எம்.பிக்கள்!

Prasanth Karthick

வெள்ளி, 25 அக்டோபர் 2024 (09:03 IST)

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலக சொல்லி அவரது கட்சி எம்.பிக்களே கெடு விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கனடா பிரதமராக தொடர்ந்து 2015 முதல் தற்போது வரை லிபரல் கட்சியின் ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வருகிறார். ஆனால் சமீபமாக ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் லிபரல் கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.

 

இந்நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ மக்களின் ஆதரவை பெற காலிஸ்தான் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருவதால் கனடா - இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் லிபரல் கட்சியில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிரான எதிர்ப்பு குரல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ரகசிய கூட்டம் நடத்திய லிபரல் கட்சி எம்.பிக்கள் அடுத்த 4 நாட்களுக்குள் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமெனவும், மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்