உலகில் நீளமான மலைப்பாம்பைப் பிடித்த முதியவர் : குவியும் பாராட்டுக்கள்

வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:08 IST)
புளோரிடா பகுதிக்குள் நுழைந்த 18 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பைப் பிடித்த முதியவர்  உலகிலேயே மிகப்பெரிய மலைப்பாம்பைப் பிடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
புளோரிடாவில் வசிக்கும் ஜான் ஹோமந்த் என்னும் முதியவர் 18 அடி நீளமும், 150 பவுண்டுகள் எடையும் கொண்ட ஒரு மலைப்பாம்பைப் பிடித்திருக்கிறார்.
 
மேலும் மயக்க ஊசி செலுத்தி அந்த பாம்பைக் காட்டுக்குள் கொண்டு வருவதற்கு 45 நிமிடங்கள் ஆனதாகவும் அந்த முதியவர் தெரிவித்துள்ளார்.
 
மக்கள் வசிக்கும் பகுதிக்குள்  மலைப்பாம்பு புகுந்ததால் அங்குள்ள மக்கள் எல்லோரும் பயந்து ஓடினார்கள். ஆனால் முதியவரான  ஜான் பயமின்றி தைரியமாக பாம்பைப் பிடித்ததால் இப்போது புளோரிடா மாகாணத்தில் வெகுவாக பிரபலமாகிவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்