அப்போது, அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் லுயிட்மிலாவின் கையில் இருந்த பையை பறிமுதல் செய்து அதை திறந்து பார்த்தனர். அப்போது மனித கை, கால் போன்ற பாகங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அன் மகனை விட்டு அவனது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதிலிருந்து தினமும் குடித்து வந்து என்னை அடித்து துன்புறுத்தி வந்தான். ஒரு கட்டத்தில் என்னை கழிவறையில் வைத்து துன்புறுத்த முயன்றான், அவனது சித்ரவதை தாங்க முடியாமல் சமைக்கும் பாத்திரத்தை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன். பின்னர் அவனது உடலுறுப்புகளை பல துண்டுகளாக வெட்டி ஒரு பையில் போட்டுக் கொண்டு வெளியில் கொட்ட நினைக்கும் போது மாட்டிக் கொண்டேன் இவ்வாறு கூறியிருக்கிறார்.