18 ஆண்டுகள் விமான நிலையத்தில் வாழ்ந்தவர் மரணம்!~

திங்கள், 14 நவம்பர் 2022 (22:15 IST)
பாரீஸில் 18 ஆண்டுகள் விமான நிலையத்தையே வீடாக்கி வாழ்ந்து வந்த மெர்ஹான் மரணடைந்தார்.

ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் மெர்ஹான் கரீமி நாசேரி(77). இவர் தன் தாயைத் தேடி ஐரோப்பியாவுக்குச் சென்றபோது, அவருக்கு ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவர் அந்த நாடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு பாரீஸ் நாட்டில் உள்ள விமான  நிலையத்திற்கு வந்த போது, அந்த விமான  நிலையத்தில் உள்ள 2 எப் என்ற பகுதியை தன் வசிப்பிடமாக மாற்றினார்.

இவரால் பெரிதும் கவரப்பட்ட  இயக்குனர் ஸ்பீல் பெர்க் இவரது வாழ்க்கையை மையப்படுத்தி தி டெர்மினல் என்ற படத்தை இயக்கினார். இப்படத்திற்காக அவரது குறிப்பிட்ட தொகை கிடைத்தது. பின்னர், ஒரு ஓட்டல் வாழ்ந்து வந்த அவர் சமீபத்தில் விமான நிலையத்திற்கே வந்து தங்கினார். இந்த நிலையில் நேற்று முன் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்