ஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு ஐபோன் இலவசம்

வியாழன், 15 ஏப்ரல் 2021 (20:19 IST)
இங்கிலாந்து நாட்டில் வசித்துவருபவர் நிம் ஜேம்ஸ். இவர் டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் இவருக்கு ஆப்பிள் ஐபோன் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள ட்விக்கன்ஹாவில் வசித்து வருபவர்  ஜேம்ஸ். இவர் டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்கள் ஆர்டம் செய்துவிட்டு அதற்கான பில் தொகையைக் கட்டியுள்ளார். அவரிடம் ஆப்பிளைக் கொடுத்த ஊழியர்கள் உங்களுக்கு ஆச்சர்யம் காத்திருக்கிறது எனக் கூறினர்.

ஜேம்ஸ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பைய்னுள் ஆப்பிள் ஐபோன் இருந்துள்ளது. இதுகுறித்து ஜேம்ஸ் கூறியதாவது: எனக்கு ஐபோன் பரிசளித்த டெஸ்கோவிற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

டெஸ்கோ நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவர இத்திட்டத்தைக் கடைபிடித்து குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்