போர்ச்சுகல் நாட்டின் வில்லா நோவாடா ரெயின்ஹா நகரில் உள்ள ஒரு இரண்டு மாடி ஓய்வு விடுதியில் வார விடுமுறையை களிக்க பொதுமக்கள் கூடினர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு தீ விபத்திலிருந்து தப்பிக்க வெளியேறினர். இதன்காரணமாக அப்பகுதியில் கூட்டநேரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநேரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.