கனரா வங்கியில் தீ விபத்து; ரூ. 22 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது.

திங்கள், 18 டிசம்பர் 2017 (12:19 IST)
கனரா வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால், ரூ. 22 கோடி மதிப்பிலான நகைகள் சேதாரமின்றி தப்பியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் பஸ் நிலையம் முன்பு கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் வங்கி திறக்கப்படவில்லை. மாலை சுமார் 4 மணியளவில் வங்கியில் இருந்து கரும்புகை வெளியேரியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் வங்கியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக வங்கியில் இருந்த ரூ. 40 லட்சம் மற்றும் ரூ. 22 கோடி மதிப்பிலான நகைகள் தீ விபத்தில் இருந்து தப்பின.
 
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து பேரையூர் போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்