இறுதி அஞ்சலி செலுத்துவது என்பது மனிதன் உருவாக்கிக்கொண்ட பழக்கம். வேறு உயிரினங்களும் இப்படி செய்யுமா என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இதுகுறித்து மெல்போர்ன் பல்கலைகழக பேராசிரியர் மார்க் எல்கர் கூறும்போது “மனிதர்கள் போல எறும்புகள் இறுதி அஞ்சலி செலுத்தாது. மேலும் இறந்து போனவற்றை தின்று அரித்து இயற்கை சமநிலையை பேண உதவுபவை எறும்புகள்தான். ஒருவேளை எறும்புகளே அந்த தேனீயை புற்றுக்கு இழுத்து சென்றிருக்கலாம்.” என்று கூறியிருக்கிறார்.
மற்றொரு பூச்சி ஆராய்ச்சியாளரான டேவிட் நோட்டான் “நான் பார்த்தவரை அந்த எறும்புகள் ஹேர்வெஸ்டர் எனப்படும் சைவ பொருட்களை சாப்பிடும் வகை எறும்புகள் என்றே தெரிகிறது. அவை பூ இதழ்களை தங்களது புற்றிற்கு கொண்டு சென்று கொண்டிருந்திருக்கலாம். இறந்த தேனி புற்றின் பாதையை அடைத்தவாறு அதன் மேல் கிடந்திருக்கலாம். அதனால் எடுத்து வந்த இதழ்களை தேனீயை சுற்றி போட்டுவிட்டு தேனீயை அகற்றும் முயற்சியில் எறும்புகள் இறங்கியிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.