அரசு ஊழியர்களை மன்னிச்சிட்டோம்; வேலைக்கு வாங்க! – தலீபான்கள் உத்தரவு!

செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (11:25 IST)
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ள நிலையில் அரசு ஊழியர்களை பணிக்கு திரும்ப உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகி கொண்ட நிலையில் தலீபான்கள் மொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் மற்ற நாட்டவர் உயிருக்கு ஆபத்து என்பதை தாண்டி ஆப்கானிஸ்தானிலேயே வசித்த தலீபான் எதிர்ப்பாளர்களுக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் பல ஆப்கன் மக்களுமே நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்று வருகின்றனர். இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தலீபான்கள், ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் வழக்கம்போல அலுவலகங்களுக்கு சென்று பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்