ஆப்கானிஸ்தான் புதிய அதிபராக தாலிபான் தீவிரவாத தலைவர் நியமனம்!

செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (10:56 IST)
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தலீபான்கள் கை உயர தொடங்கியது. ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய தலீபான்கள் நேற்று தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். அதை தொடர்ந்து ஆட்சியை விடுத்து தலைமறைவாகியுள்ளார் அந்நாட்டு அதிபர்.
 
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வாழும் பிறநாட்டு மக்களை திரும்ப வரும்படி அந்தந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்காக சிறப்பு விமானங்களை உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் அனுப்ப தொடங்கியுள்ளன. இதனால் வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிர கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கும்பல் கும்பலாக இரவிலிருந்து தங்கள் நாட்டு விமானங்களுக்காக காத்திருக்க தொடங்கியுள்ளனர்.
 
அதேபோல் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வருவோருக்கு மின்னணு விசா முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்கனில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவு எடுத்துள்ளது. மேலும், இந்தியாவினுள் நுழைவோருக்கு விரைவாக விசா வழங்கும் வகையில் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அதிபராக தாலிபான் தீவிரவாத தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்