இனி கல்லானாலும் கணவன்தான்.. விவாகரத்தை தடை செய்த தாலிபான்!

செவ்வாய், 7 மார்ச் 2023 (12:29 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் இதுவரை மேற்கொண்ட விவாகரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பின் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே செல்லக்கூடாது, தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஆண்களின் துணை இல்லாமல் விமான நிலையம், திரையரங்கு, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லக்கூடாது, கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக் கூடாது உள்ளிட்ட பல சட்டங்களை பெண்களுக்கு எதிராக தாலிபான் அமைப்பு விதித்துள்ளது.

இந்நிலையில் தற்போது கடந்த ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்துகளை ரத்து செய்து அறிவித்துள்ளது தாலிபான். எனவே கணவனிடம் விவாகரத்து பெற்ற பெண்கள் தற்போது மீண்டும் அந்த கணவனோடே சேர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இனி பெண்கள் விவாகரத்து செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கணவர் மதுவுக்கு அடிமையாகி இருந்தாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருந்தாலோ மட்டுமே விவாகரத்து செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது ஆப்கன் பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்