ஃபேஸ்புக்கில் லைக் செய்தவருக்கு 4000 டாலர் அபராதம்

புதன், 31 மே 2017 (20:26 IST)
சுவிட்சர்லாந்து நீதிமன்றம் ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய போஸ்ட் ஒன்றை லைக் செய்தவருக்கு 4000 டாலர் அபராதம் விதித்துள்ளது.


 

 
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த எர்வின் கெஸ்லர் என்பவர் ஃபேஸ்புக்கில் விலங்குகள் நல குழு ஒன்றை நடத்தி வருகிறார். அந்த குழுவில் அவர் பதிவிட்ட கருத்துக்கு இனவாத தன்மை கொண்ட கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
அந்த கருத்துக்களுக்கு ஒருவர் லைக் செய்துள்ளார். முன்னதாக எர்வின் இனவாத கருத்துக்கள் பதிவு செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. மேலும் அந்த கருத்துக்களுக்கு லைக் செய்தவருக்கு நீதிமன்றம் அபராதாம் விதித்தது. லைக் செய்வது குறிப்பிட்ட கருத்தை பலருக்கும் பரப்பு செயல் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவருக்கு 4000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
 
மேலும் இதே போன்ற ஒரு வழக்கில் பாடகி ஒருவருக்கு 35,000 டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்