இந்த நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்ததாகவும், இந்த குண்டு வெடிப்பால் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி 14 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் 30 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் முக்கிய கட்சிகளில் ஒன்றாகிய அவாமி தேசிய கட்சியின் தலைவர் பிலார் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிலார் மரணத்தை அடுத்து பாராளுமன்ற தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் இதுகுறித்து இன்னும் எவ்வித முடிவையும் அறிவிக்கவில்லை