இந்தியாவில் பைக்கில் சுற்ற ஆசைப்படும் பாகிஸ்தான் பறவை
சனி, 7 ஜூலை 2018 (15:41 IST)
பாகிஸ்தானில் சுதந்திரமாக மோடார் சைக்கிளில் பயணம் செய்துவரும் ஜெனித் இர்பான் என்ற இளம்பெண் இந்தியாவிலும் பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என்று தனது ஆசையை தெரிவிதுள்ளார்.
ஜெனித் இர்பான்(23) என்ற இளம்பெண் பாகிஸ்தான் நாட்டில் ஆபத்தாக கருதப்படும் வடக்கு பகுதியில் தனியாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்தவர். இவரைப் பற்றி பாகிஸ்தானில் ஒரு திரைப்படமே வெளியாகியுள்ளது.
இவர் மறைந்த தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றவே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். தனது மோட்டார் சைக்கிள் அனுபவம் குறித்து இவர் கூறியதாவது:-
நகர்புற பகுதியில் பெண் மோட்டர் சைக்கிள் ஓட்டுவதற்கு ஆண்கள் மத்தியில் எதிர்ப்பு, வரவேற்பு இரண்டுமே உள்ளது. மலைப்பகுதிகளைப் பொறுத்தவரை ஒரு பெண் பள்ளத்தாக்குகள் வழியே பைக்கில் செல்வதை ஆண்கள் பெருமையாக கருதுகிறார்கள்.
இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள உறவு சீரடையும் என்று நம்புகிறேன். அப்போது நான் கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் வருவேன். காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்றும் ஆசையுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் தற்போது தனியாக பயணிக்கும் பெண்களின் அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெண்களுக்கு முழு சுதந்திரம் இல்லாத இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் இருந்து இளம்பெண் மோட்டார் சைக்கிள் பயணம் செய்வது பாராட்டத்தக்க ஒன்று.