உணவு இல்லை; பசியால் வாடும் மக்கள்: ஆமைக்கறி பரிந்துரைத்த அரசு!
புதன், 22 ஜூலை 2020 (09:51 IST)
வடகொரியாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பசியை போக்கிக்கொள்ள டெர்ராபின் எனும் ஆமையை உணவாக உண்ண பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வடகொரியா மேற்கொண்ட பல அணு ஆயுத சோதனைகளால் ஐநா இந்நாட்டின் மீது பொருளாதார தடையை விதித்தது. ட்ரம்ப் - கிம் இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாத நிலையில் இந்த தடை தொடர்ந்து வருகிறது. அதோடு தற்போது கொரோனா பீதி காரணமாக வடகொரியா தனது எல்லைகளை மூடியுள்ளது.
எனவே, வடகொரியாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்களின் பசியை போக்க வடகொரியா அரசு டெர்ராபின் எனும் இருவகையான ஆமையை உணவாக பரிந்துரைத்துள்ளது. இந்த ஆமை நல்ல சுவையுடனும் அதிக ஊட்டச்சத்தும் கொண்டது எனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, அந்நாட்டு விஞ்ஞானிகள் பசியை போக்கும் மருந்துகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.