வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (15:42 IST)
சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை கொண்டு செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமிக்கு மேலே சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பல நாட்டு விண்வெளி வீரர்களும் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பும் பணிகளை நாசா தனியாக மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இதை செய்து வருகிறது.

முன்னதாக நாசாவுடன் இணைந்து இரண்டு முறை விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பிய நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இன்று மூன்றாவது முறையாக 4 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெற்றிகரமாக ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் ராக்கெட் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்