நாடாளுமன்றத்தில் பங்கமாக அவமானப்பட்ட டிரம்ப்: வைரல் வீடியோ!!

புதன், 5 பிப்ரவரி 2020 (13:32 IST)
Donald Trump

நாடாளுமன்றத்தில் தன்னுடன் கைகுலுக்க மறுத்ததால் அதிபர் ட்ரம்பின் உரையை சபாநாயகர் கிழித்து போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார் டிரம்ப். 
 
எனவே அவர் உரையாற்ற வந்த போது அவரை வரவேற்கும் விதமாக செனட் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி உட்பட அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.
 
டிரம்ப் உரையாற்றும் முன்பு முக்கிய கோப்புகளை சபாநாயகரரிடம்  வழங்கினார். அதனை பெற்றுக் கொண்டு, டிரப்புடன் கைகுலுக்க முயன்ற போது டிரம்ப் இதை கண்டுக்கொள்ளாமல் உரையை துவங்கினார். 

78 நிமிடங்கள் உரையாற்றிய அவர், தனக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் குறித்து எதுவும் உரையில் குறிப்பிடவில்லை. இன்னும் 4 ஆண்டுகள் ட்ரம்ப் ஆட்சி நீடிக்கும் என்று அனைவரும் முழக்கங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

ஆனால் டிரம்ப் உரையை முடித்தபோது அவருக்கு பின் புறம் அமர்ந்திருந்த நான்சி எழுந்து நின்று டிரம்பின் உரை நகலை கிழித்தெறிந்தார். இருப்பினும், ட்ரம்ப் அதனை கண்டுகொள்ளாமல் அவையை விட்டு வெளியேறினார். 
 
சபாநாயகர் டிரம்பின் உரையை கிழித்தது வீடியோவாக தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 

.@SpeakerPelosi tears up of State of the Union speech.#SOTU #SOTU2020 pic.twitter.com/sIpi4G7KsL

— CSPAN (@cspan) February 5, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்