வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை! – அங்கீகாரம் அளித்த ஸ்பெயின்!

வியாழன், 18 மார்ச் 2021 (09:28 IST)
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே பணிபுரியும் புதிய முறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் வாரத்தில் 4 நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தை பரிசோதித்து அதில் வெற்றியும் கண்ட நிலையில் அதை அனைத்து துறைகளிலும் அனுமதித்து வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தை கடந்த சில மாதங்களாக ஸ்பெயினும் முயற்சித்து வந்தது.

கொரோனாவால் கடந்த ஆண்டு முதலாக ஸ்பெயின் அதிகமாக பாதித்துள்ள நிலையில் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவற்றையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. இந்நிலையில் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற இந்த திட்டத்தை பரிசோதனையாக தனியார் தொழில் நிறுவனங்கள் மேற்கொண்ட நிலையில் வேலையில்லா திண்டாட்டத்தை மட்டுப்படுத்த முடிவதாகவும், உற்பத்தி அதிகமாக கிடைப்பதாகவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த திட்டத்தை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களிலும் செயல்படுத்த ஸ்பெயின் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த புதிய நடைமுறையில் உள்ள சிக்கல்களும் கண்டறியப்பட்டு தீர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்