தாயின் சடலத்தை 13 ஆண்டுகளாக வீட்டில் வைத்திருந்த மகன் கைது..!

வெள்ளி, 31 மார்ச் 2023 (13:55 IST)
தாயின் சடலத்தை 13 ஆண்டுகளாக மம்மி போல் வீட்டில் பாதுகாத்து வைத்திருந்த மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் போலந்து நாட்டில் நடைபெற்று உள்ளது. 
 
போலந்து நாட்டில் மறைந்த தனது தாயாரின் உடலை 13 துண்டுகளாக மம்மி போல் வீட்டிலேயே பாதுகாப்புடன் வைத்திருந்ததாக இறந்த தாயாரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
அவரிடம் இது குறித்து விசாரணை செய்தபோது தாய் மீது கொண்ட அன்பால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இருப்பினும் இறந்த உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் மம்மி போல் பாதுகாத்து வைத்தது சட்டப்படி குற்றம் என்று அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். 
 
தாயின் மீது உள்ள அன்பு காரணமாக 13 ஆண்டுகளாக மம்மி போல் உடலை பாதுகாத்து வைத்த மகன் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்