பிள்ளைகளை கொல்லவா? விலைவாசி உயர்வால் தாய் வேதனை!

வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (12:35 IST)
பாக். நாட்டின் பிரதமரை வெகுஜனங்கள் நிவாரணத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.


அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில், நாட்டில் மருந்துகள், மளிகை பொருட்கள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலைகள், குறிப்பாக கராச்சி நகரில் அதிகரித்து வருவதை விவரித்து பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் PML-N தலைவர் மரியம் நவாஸ் ஆகியோரை கடுமையாக சாடும் பாகிஸ்தானிய பெண் ஒருவரின் வீடியோ வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ஒரு முடங்கும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நாட்டின் பிரதமரை வெகுஜனங்கள் நிவாரணத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் கராச்சி பெண் ஒருவர் அரசாங்கத்தை கடுமையாக சாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த பெண் அந்த வீடியோவில் பணவீக்க உயர்வுக்குப் பிறகு தான் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகளைப் பற்றி அழுது புலம்புவதைக் காண முடிகிறது. மேலும் தனது குழந்தைகளுக்கு உணவு அளிக்க வேண்டுமா அல்லது அவர்களை கொல்ல வேண்டுமா என வருத்தப்படுவதும் பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது வீடியோவிற்கு பதிலளித்து, நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், ஜூன் மாதத்தில் அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்கவில்லை அல்லது மருந்துகளுக்கு புதிய வரிகளை விதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்