பிளாஸ்டிக் கடலாக மாறிய தீவு: அதிர வைக்கும் புகைப்படம்!!
திங்கள், 23 அக்டோபர் 2017 (10:45 IST)
ரோட்டன் தீவு பகுதியில் உள்ள கடல் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கிறது,. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோண்டுராஸ் நாட்டின் அருகில் உள்ள ரோட்டன் தீவு பகுதியில் உள்ள கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் மிதந்து வருகிறது. அதாவது சூரிய ஒளியை கடலுக்குள் செல்லவிடாதபடி இந்த கழிவுகள் அடைத்துக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் கவுதமாலா நாட்டில் பெய்த மழையால், குப்பைகள் அனைத்தும் ஆறுகளில் கலந்தது. இவை கடலில் போய் சேர்த்தது. இதனால் கடல் கழிவுப்பொருட்களால மாசு அடைந்துவிட்டது.
பிளாஸ்டிக் பாட்டில்கள், முள் கரண்டிகள், கத்திகள், பைகள், குப்பைகள் என்று கடலுக்குள்ளும் அதன் மேற்பரப்பிலும் ஆயிரக்கணக்கான குப்பைகள் மிதந்து கொண்டிருக்கின்றன.
இதனால் கடல் உயிரனங்கள் பல உயிரிழக்க கூடும். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் கடல் நீர் விஷமாக மாறிவிடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.