பிஞ்சு குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொரியர் அனுப்பிய தாய்....

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (11:10 IST)
தனக்கு பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி பார்சல் செய்து அனாதை இல்லத்திற்கு ஒரு பெண் கொரியர் அனுப்பிய விவகாரம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சீனாவில் தாதா என்ற பகுதியில் உள்ள ஒரு கொரியர் அலுவலகத்திற்கு ஒரு பார்சல் வந்தது. அதில் ஒரு அனாதை விடுதியின் முகவரி கொடுத்தது. அனவே அந்த பார்ச்லை எடுத்துக்கொண்டு, கொரியர் பாய் சென்று கொண்டிருந்த போது, அந்த பார்சலில் அசைவு இருப்பதையும், குழந்தையின் அழுகை சத்தம் கேட்பதையும் கேட்டு திடுக்கிட்ட அவர் பார்சலை பிரித்து பார்த்துள்ளார்.
 
அதில் பிறந்த பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அதன் பின் அங்கு பொதுமக்கள் கூடினர். போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அதன் பின், குழந்தையை பார்சல் அனுப்பிய 24 வயது தாயை கண்டுபிடித்தனர். 
 
அவரின் பெயர் லுவோ எனபது தெரியவந்துள்ளது. குழந்தையை வந்து பெற்றுக்கொள்ளுமாறு அவருக்கும், குழந்தையின் தந்தைக்கும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். 
 
சீனாவில் குழந்தையை வதைப்பவர்களுக்கு குறைந்த பட்சம் 5 வருடம் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்