மிதக்கும் நிலைக்கு வந்த சரக்குக் கப்பல்: இயல்பு நிலைக்கு சூயஸ் கால்வாய் !

திங்கள், 29 மார்ச் 2021 (10:28 IST)
சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல். 

 
எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும், ஐரோப்பாவுக்கு இடையே போக்குவரத்துக்கு பெரும் பாலமாக இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 12 சதவீதம் இந்த வழித்தடத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கால்வாய் வழியே பயணித்த எவர்கிவன் என்ற சரக்குக்கப்பல் கால்வாயின் குறுக்கே கிடைமட்டமாக சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் கப்பல் சிக்கிய பகுதிகளில் மணலை தோண்டி ஆழப்படுத்தி பின்னர் இழுவை படகுகளை கொண்டு கப்பலை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு பலன் அளிக்கும் விதமாக சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக மீட்புக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த 6 நாட்களாக இந்த கப்பல் சிக்கி கிடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்து இருந்தது. இப்போது சரக்கு கப்பல் மீட்கப்பட்டதால் மீண்டும் சரக்கு போக்குவரத்து தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்