தனியா நிப்பா.. அவ பக்கத்துல போகாதீங்க? பீதியை கிளப்பும் பெண் சைக்கோ கில்லர்! – Serbian Dancing Lady!

திங்கள், 10 ஏப்ரல் 2023 (11:32 IST)
நடு இரவில் சாலைகளில் நடனமாடும் சைக்கோ கில்லர் பெண் ஒருவர் குறித்த வீடியோ வைரலாகி பலரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஆங்காங்கே பல இடங்களில் வித்தியாசமான முறைகளில் கொலை செய்யும் சைக்கோ கொலைக்காரர்கள் பற்றிய கதைகள் ஏராளம் உண்டு. அவையெல்லாம் கேட்கும்போதே நம்மை பீதியில் ஆழ்த்தி விடும். அப்படியான ஒரு சைக்கோ கில்லர் கதைதான் செர்பியாவின் தி டேன்சிங் லேடி என்ற சமீபத்திய வீடியோ.

செர்பியாவின் ஆள் நடமாட்டமற்ற வீதிகளில் நடு இரவில் பெண் ஒருவர் அமானுஷ்யமான நடனம் ஒன்றை ஆடிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து அந்த பக்கமாக செல்லும் ஒருவர் “யாரது?” என்று கேள்வி கேட்கிறார். உடனே ஆடுவதை நிறுத்திவிட்டு அந்த பெண் உருவம் சில நொடிகள் அசையாமல் நிற்கிறது. பின்னர் தன் பைக்குள் கைவிட்டு எதையோ எடுக்கிறது. முனையில் இரும்பு கம்பி கட்டப்பட்ட கயிறு அது. அதை எடுத்து அந்த பெண் உருவம் வேகமாக சுழற்ற தொடங்குகிறது. பின்னர் அதை சுழற்றியபடியே அமானுஷ்யமான ஒரு ஓலமிடும் சத்ததுடன் கேள்வி கேட்ட நபரை கொல்ல ஓடிவருகிறது. இந்த வீடியோ வைரலாகி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.




செர்பியாவின் இந்த திகிலூட்டும் கதை தற்போது பல நாடுகளில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த வீடியோக்கள் ஏற்கனவே 2019ம் ஆண்டில் வைரலாகி செர்பியாவில் பீதியை ஏற்படுத்தி இருந்தது. அப்போது இதுகுறித்து விளக்கமளித்த செர்பிய காவல்துறை, அவ்வாறான சைக்கோ கில்லர் பெண்ணை யாரும் பார்த்ததாகவோ, அந்த பெண்ணால் யாரேனும் தாக்கப்பட்டதாகவோ, கொல்லப்பட்டதாகவோ எந்த வித புகார்களும், ஆவணங்களும் பதிவு செய்யப்படவில்லை என்று தெளிவுப்படுத்தியிருந்தனர்.

இது டிக்டாக் போன்ற செயலிகளில் லைக்ஸ் அதிகரிப்பதற்காக சிலர் செய்யும் வேலை என்ற பேச்சு இருந்து வந்தாலும் இதுபோன்ற வீடியோக்கள் பார்ப்பவர் மனதில் பீதி எழ செய்வதாக உள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்