48,500 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் கண்டுபிடிப்பு.. இன்னும் மனிதர்களை தாக்க வாய்ப்பு!

புதன், 30 நவம்பர் 2022 (09:29 IST)
48 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வைரஸ் இன்னும் மனிதர்களை தாக்கும் அளவிற்கு சக்தியுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
செர்பியா நாட்டில் உள்ள பனிப்பாறைகளில் அகழ்வாராட்சி நடந்து கொண்டிருந்த போது அதில் 48 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
பனிப்பாறைகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்தாலும் இந்த வைரஸ் மனிதர்களை தாக்கும் குணத்தை கொண்டிருப்பதாக ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த வைரசை இரண்டு வெவ்வேறு இடத்தில் விஞ்ஞானிகள் சேகரித்து அதனை ஆய்வு செய்ததில் இந்த வைரஸ்கள் இன்னும் பல மனிதர்களை தாக்கும் வீரியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 
 
45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் இன்னும் மனிதர்களை தாக்கும் அளவுக்கு வீரியத்துடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்