உலகக் கோப்பை கால்பந்து : செர்பியாவை வீழ்த்தி பிரேசில் சூப்பர் வெற்றி

வெள்ளி, 25 நவம்பர் 2022 (23:10 IST)
ஃபிஃபா -22வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது கத்தாரில் கோலாகலமாக நடந்து வருகிறது.

இத்தொடரில், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட முன்னணி அணிகள் உள்ளிட்ட 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

 இம்முறை எந்த அணி கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்றைய போட்டியில் செர்பியாவுக்கு எதிராக அதிகமுறை உலகக் கோப்பை வென்ற அணியாக பெருமைபெற்ற பிரேசில் மோதியது.

இதில், நட்சத்திர வீரரான நெய்மர்  79 வது  நிமிடத்தில் எதிரணி வீரர் அவரிடமிருந்து பந்தைப் பறிக்க முயன்றபோது, கீழே விழுந்தார்.

காலில் அடிபட்டுள்ள அவரை மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்றனர். இதனால், அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. நாளை இதுகுறித்து அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகிற்து.

ALSO READ: உலகக் கோப்பை கால்பந்து : வேல்ஸை வீழ்த்தி இரான் வெற்றி !
இப்போட்டியில் செர்பியாவை பிரேசில் அணி 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்