இன்ஸ்டாகிராமில் இனி செல்பி வீடியோ கட்டாயம்: அதிரடி தகவல்

புதன், 17 நவம்பர் 2021 (16:17 IST)
இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்குபவர்கள் இனிமேல் செல்பி வீடியோவை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கானோர் பயனாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பாக திரை உலக, அரசியல் பிரபலங்கள் இதில் கணக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இனிமேல் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்குபவர்கள் செல்பி வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும் என்றும் அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதிபலிக்காது என்றும் ஒரு மாதத்தில் தானாகவே சர்வரில் இருந்து அழிந்து விடும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
ஆனால் இந்த நடைமுறை எப்பொழுது முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை இன்ஸ்டாகிராம் நிர்வாகம் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்