உலக வங்கியின் நிர்வாக இயக்குனரான எஸ்பிஐ நிர்வாக இயக்குனர் !

வெள்ளி, 12 ஜூலை 2019 (22:19 IST)
பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் அன்ஷுலா காந்த், உலக வங்கியின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் என்பவர் கூறியபோது, 'அன்ஷூலா காந்த் என்பவரை உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்வதில் பெருமை அடைகிறேன். அவருடைய 35 வருட அனுபவம், வங்கிகளை கையாளும் திறன், உலக வங்கியை சிறப்பாக வழிநடத்த உதவும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
 
தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் இந்திய தலைமை நிதி ஆலோசகராக பணியாற்றி வரும் அன்ஷுலா காந்த், தனது திறமையால் சுமார் 3800 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான நிதி இருப்பும், 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகளையும் பாரத ஸ்டேட் வங்கியில் வைத்துள்ளார் குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்