வளைகுடா நாடுகளுக்குள் போர் பதற்றம்: கத்தாருக்கு சவுதி அரேபியா மிரட்டல்!!

புதன், 16 ஆகஸ்ட் 2017 (15:20 IST)
பயங்கரவாதிகள் மற்றும் ஈரானுடன் கத்தார் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி மற்ற வளைகுடா நாடுகள் கத்தாருடனான தொடர்புகளை துண்டித்தது.


 
 
மேலும், சவுதி விமான எல்லைக்குள் கத்தார் விமானங்கள் பறப்பதனை தவிர்க்குமாறு சவுதி அறிவித்தது. ஆனால், கத்தார் அரசு இதை பொருட்படுத்தவில்லை.
 
இந்நிலையில், கத்தார் விமானங்கள் தங்கள் விமான எல்லைக்குள் நுழைந்தால் தாக்குதல் மேற்கொள்ளும் உரிமை உள்ளதாக சவுதி  தெரிவித்துள்ளது.
 
அதோடு இதன் பின்னர் கத்தார் விமானங்கள் சவுதி எல்லைக்குள் நுழைந்தால் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என எச்சரிக்கைவிடுத்துள்ளது.
 
இவ்வாறான சச்சரவு நிலை தொடருமாயின் வடகொரியா அமெரிக்க போன்று வளைகுடாவிலும் போர் பதற்ற அபாயம் உருவாகக்கூடும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்