100 மில்லியன் டாலர் செலவில் விடுமுறையை கழித்த சவுதி மன்னர்

புதன், 23 ஆகஸ்ட் 2017 (13:16 IST)
மொராக்கோ நாட்டில் ஒருமாத காலம் விடுமுறையை கொண்டாடிய சவுதி மன்னர் சுமார் ரூ.10 கோடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
சவுதி மன்னர் சல்மான் தனது கோடை விடுமுறையை அவருக்கு பிடித்த மொராக்கோ நாட்டில் உள்ள டேன்ஜியர் பகுதியில் மிக ஆடம்பரமாக கொண்டாடியுள்ளார். அவருடன் அரசு குடும்பத்தினர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள், பணியாளர்கள் சென்றுள்ளனர்.
 
அவரது பாதுகாப்புக்கு மொராக்கோ அரசால் 30 பேர் கொண்ட சிறப்பு படை வழங்கப்பட்டது. சுமார் 200 கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மன்னரின் ஒரு மாத காலம் விடுமுறைக்கு ரூ.10 கோடி செலவு செய்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆனால் மன்னரின் வருகையால் மொராக்கோ நாட்டின் சுற்றுலா தொடர்பான வருவாயில் 1.5% அதிக லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்